டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் லஞ்சம்: சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸார், அரசுப் பணி செய்ய லஞ்சம் பெற்றதாக நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும்

News image
Updated On :28 அக்டோபர் 2014, 12:28 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸார், அரசுப் பணி செய்ய லஞ்சம் பெற்றதாக நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சேவகபாண்டியன். இவரது மகன் முத்துப்பிரகாஷ். இவர் மெக்கானிக்கல் இஞ்ஜினியரின் பட்டயப் படிப்பு முடித்து, வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டுள்ளார். இதற்கு இவரது பிறப்புச் சான்று தொடர்பாக தடையில்லாச் சான்று நகராட்சி அலுவலகத்தில் பெறவேண்டியிருந்துள்ளது.

இதற்காக நகராட்சி அலுவலகத்தில் உள்ள சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் சந்தித்துள்ளார். அவர் விண்ணப்பத்தில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கூறவே, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோரிடம் அக்குறைகளை நிவிர்த்தி செய்வதற்கான அனைத்து ஆவணங்களையும் பெற்று திரும்ப ஒப்படைத்துள்ளார். திங்கள்கிழமை முத்துப்பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமாரைப் போய் பார்த்து அனைத்து குறைகளையும் சீர்செய்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு தடையில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். ஆனால் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார், தடையில்லாச் சான்றிதழ் வழங்க பணம் ரூ.1000 தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனைத் தர மனதில்லாத முத்துப்பிரகாஷ், விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழில் தடுப்பு போலீஸில் புகார் செய்தார். காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், ஆய்வாளர்கள் விஜயகாண்டீபன், மதியழகன் ஆகியோரின் ஆலோசனையில் பேரில், ரசயானம் தடவிய பணம் ரூ.1000-யை, சுரேஷ்குமாரின் உதவியாளர் பாலகுமார் அலுவலகத்தில் பெறும்போது மறைந்திருந்த போலீஸார் அவரைப் பிடித்தனர். மேலும் இந்தப் பணம் சுரேஷ்குமாருக்கு வழங்குவதற்காக பெறப்பட்டது என்று அவர் கூறியதையடுத்து அவரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.