மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பயிர் காப்பீடு திட்டம்: சிறு, குறு விவசாயிகளுக்கு சிறப்பு சலுகை

நடப்பு சம்பா பருவத்திற்கு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று பிர்க்கா அளவிலான மகசூல் இழப்பு அடிப்படையில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஆ.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 அக்டோபர் 2014, 1:06 pm

ஜி.சுந்தரராஜன்

நடப்பு சம்பா பருவத்திற்கு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று பிர்க்கா அளவிலான மகசூல் இழப்பு அடிப்படையில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஆ.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி:

சம்பா பயிர் செய்துள்ள விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.19,500-க்கு காப்பீடு செய்து கொள்ளலாம். கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகளுக்கு கடன் தொகையிலேயே காப்பீட்டுக்கான பிரிமியம் தொக் ரூ.195 பிடித்தம் செய்து கொள்ளப்படுகிறது. பயிர் கடன் பெறாத விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள விண்ணப்ப படிவங்களை தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்கள் மூலம் அல்லது கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்று பூர்த்தி செய்து அடங்கல் அல்லது சிட்டா இணைத்து தங்கள் பகுதிக்குரிய தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் அளித்து பிரிமியத் தொகை ரூ.195-ஐ செலுத்த வேண்டும்.

பிரிமியத் தொகை AIC of India AXIS BANK A/C No: 0060102000018027, Chennai என்ற முகவரிக்கு வங்கி வரைவோலையாகவும் செலுத்தலாம். இதற்கான காலக்கெடு நவம்பர் 15-ம் தேதியாகும். எனவே கடன் பெறாத விவசாயிகள் நவ.15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் பயிர் கடன் பெற்றாத சிறு, குறு விவசாயிகள் ரூ.19.500-க்கான பிரிமியத் தொகை ரூ.176 மட்டும் செலுத்தினால் போது. மீதத்தொகை ரூ.19-ஐ அரசு கூடுதல் மானியமாக வழங்குகிறது என வேளாண் உதவி இயக்குநர் ஆ.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.