மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

திமுக நிர்வாகி வீட்டில் 40 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே திமுக நிர்வாகி வீட்டில் 40 பவுன் நகைகள், ரூ.1லட்சம் வியாழக்கிழமை திருட்டு போனது.

Updated On :30 அக்டோபர் 2014, 12:45 pm

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே திமுக நிர்வாகி வீட்டில் 40 பவுன் நகைகள், ரூ.1லட்சம் வியாழக்கிழமை திருட்டு போனது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுவது:

விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தனியார் சர்க்கரை ஆலை ஊழியர் பலராமன்(63). இவரது மனைவி கிரகலட்சுமி. மகன் விஜயவேலன், விக்கிரவாண்டி ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார்.

முண்டியம்பாக்கம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடந்தது. இதில், பலராமன் தனது குடும்பத்தோடு சென்று கலந்து கொண்டார். பின்னர், வீடு திரும்பிய போது வீட்டு கதவு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 40 பவுன் நகை, ரூ.1லட்சம், வெள்ளி கொலுசு ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

 தகவலறிந்த விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் ராஜன் மற்றும் போலீஸார் சம்பவ  இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், விழுப்புரத்திலிருந்து கைரேகை நிபுணர், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

பலராமன் வழக்கமாக தனது வீட்டை பூட்டி சாவியை வைக்கும் இடத்தை தெரிந்து கொண்டவர்களே இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் குறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.