வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பருவம் முடியும் தருவாயில் மழை நீடிப்பு: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 93.00 அடியாக உயர்வு

தென்மேற்கு பருவம் முடியும் தருவாயில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருகிறது. சில தினங்களாக நீடித்து வரும் மிதமான மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம்

News image
Updated On :3 செப்டம்பர் 2014, 1:38 pm

ஷேக் அப்துல்காதர்

தென்மேற்கு பருவம் முடியும் தருவாயில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருகிறது. சில தினங்களாக நீடித்து வரும் மிதமான மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. புதன்கிழமை மாலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 93.00 அடியாக இருந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 20 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 35 அடியும் அதிகரித்துள்ளது. இதேபோல் கடனாநதி, ராமநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

பதிவான மழை:

புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 2 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 15 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 10 மி.மீ மழையும், செங்கோட்டையில் 10 மி.மீ மழையும் பெய்துள்ளது. புதன்கிழமை நீர்பிடிப்பு பகுதியிலும், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி பகுதியில் மிதமான மழை பெய்தது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,719.68 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 194 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 200.52 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 97.69 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு  20 கனஅடியும், குண்டாறு அணைக்கு 8 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 86 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 30 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

நீர்மட்டம் உயர்வு:

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து மாலை 6 மணி நிலவரப்படி 93.00 அடியாக இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 1129.75 கனஅடி திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 104.59 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55.10 அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனத்திற்கு 45 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கடனாநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 71.00 அடியாகவும், ராமநதி அணை  நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 65.00 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 2.50 அடி உயர்ந்து 110.25 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 39.70 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 15.00 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 4 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 8.56 அடியாகவும் இருந்தது.

கடனாநதி அணையில் இருந்து 105 கனஅடியும், ராமநதி அணையில் 40 கனஅடியும், கருப்பாநதி அணையில் 10 கனஅடியும், குண்டாறு அணையில் 8 கனஅடியும், அடவிநயினார் அணையில் 20 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நிகழ் பருவமான தென்மேற்கு பருவம் முடிவடையும் நிலையில் மழை நீடித்து வருவதால் திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரிரு நாளில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.