ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி-கார் மோதல்: 6 பேர் காயம்
நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூரில் சுடலைமாடசாமி கோவில் உள்ளது. இக் கோவில் திருவிழாவிற்கு கோவில் வகையறாவைச் சேர்ந்த சேத்தூர் பூபதி (64) தலைமையில் 5 பேர் மதுரையில் பத்திரிக்கை


ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரியும் காரும் இன்று மோதிக்கொண்டதில் 6 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் இருவர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூரில் சுடலைமாடசாமி கோவில் உள்ளது. இக் கோவில் திருவிழாவிற்கு கோவில் வகையறாவைச் சேர்ந்த சேத்தூர் பூபதி (64) தலைமையில் 5 பேர் மதுரையில் பத்திரிக்கை வைத்துவிட்டு, கிருஷ்ணன்கோவில்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர்.
பூவாணி விலக்கு அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரியும் காரும் மோதிக்கொண்டன. இதில் காரை ஓட்டி வந்த சங்கரன்கோவிலைச் சேர்ந்த முத்துக்குமார் மற்றும் காரில் வந்த தளவாய்புரத்தைச் சேர்ந்த தாமோதரன், செவல்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ், பார்த்தீபன், வாசுதேவநல்லூரைச் சேர்ந்த செல்வகணேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்த முத்துக்குமார், தாமோதரன் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் ராசுவைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...