அச்சிறுப்பாக்கம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து ஒரு பெண் பலி
அச்சிரப்பாக்கம் அருகே சென்னையில் இருந்து சேலம் சென்றுகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து ஒன்று இன்று காலை கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதில், பஸ்ஸில் பயணித்த பெண் பயணி ஒருவர் பலியானார். மேலும், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

Updated On :4 செப்டம்பர் 2014, 6:33 am







