ஏ.வி.எம். பேரனிடம் மிரட்டி பணம்பறித்த 2 பேர் கைது
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் அச்சகம் நடத்திவருபவர் கார்திக் மெய்யப்பன் இவர் ஏ.வி.மெய்யப்பச்செட்டியாரின் பேரன். இவரது அச்சகத்தின் தொழிற்சங்கத்திற்கு நிர்வாகிகளாக இருப்பவர்கள்


அச்சகஅதிபரை பணம்கேட்டு மிரட்டிய தொழிற்சங்க நிர்வாகிகள் இருவரை கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் அச்சகம் நடத்திவருபவர் கார்திக் மெய்யப்பன் இவர் ஏ.வி.மெய்யப்பச்செட்டியாரின் பேரன். இவரது அச்சகத்தின் தொழிற்சங்கத்திற்கு நிர்வாகிகளாக இருப்பவர்கள் தேவராஜன்(40) நந்தகுமார்(38)இருவரும் அவ்வபோது கார்திக் மெய்யப்பனை மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம் போல் சனிகிழமை கார்திக் மெய்யப்பனை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட இருவரும் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும்,இவர்களது பேச்சை செல்போனில் பதிவு செய்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸ் ஆய்வாளர் அறிவுரையின்படி தொழிற்சங்க நிர்வாகிகளை தொடர்புக்கொண்ட கார்திக் மெய்ய்ப்பன், பணத்தை பெற்றுக்கொள்ள அம்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு வரவைத்தார்.
அங்கு வந்த போது போலீஸார் இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...