பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 25-ம் தேதி (வியாழக்கிழமை) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று கோ-ஆப் டெக்ஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
கோ-ஆப் டெக்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலர் ஏ.அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் குமார், பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலர்கள் பிரேம்குமார், ராமநாதன், சேகர், இணைச் செயலர் ஜெகதீசன், பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில், இலவச வேஷ்டி-சேலை திட்டத்தை மீண்டும் கோ-ஆப் டெக்ஸ் மூலமே நடத்த அரசு உத்தரவிட வேண்டும்.மாவட்டம்தோறும் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்துக்கு கிடங்கு வசதி இருந்தும் தனியாருக்கு சொந்தமான கிடங்குகளை வாடகைக்கு அமர்த்தி பணத்தை செலவிடுவதைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

