ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் வி.ஏ.ஓ. வை அரிவாள் முனையில் மிரட்டி 25 பவுன் நகை கொள்ளை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலரை ஞாயிற்றுக்கிழமை அரிவாள் முனையில் மிரட்டி, அவர் மனைவி அணிந்திருந்த தாலி செயின் உள்ளிட்ட 25 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற 5 நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :7 செப்டம்பர் 2014, 5:31 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலரை ஞாயிற்றுக்கிழமை அரிவாள் முனையில் மிரட்டி, அவர் மனைவி அணிந்திருந்த தாலி செயின் உள்ளிட்ட 25 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற 5 நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் சாலையில் மடவார்வளகத்தை அடுத்து வன்னியம்பட்டி விலக்குக்கு முன்னால் குடியிருந்து வருபவர் க.பழனிச்சாமி. இவர் மம்சாபுரம்-வாழைக்குளம் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இவரது மனைவி தனுஷ்கோடி. இவர்களின் இரு மகன்களும் வெளியூரில் உள்ளார்கள்.

சனிக்கிழமை இரவு வீட்டின் அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டு, உள் அறையில் ஏ.சி. போட்டு தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் பழனிச்சாமியின் காலை யாரோ கட்டுவது போல இருந்துள்ளது. இதனையடுத்து அவர் எழுந்திருக்க முயற்சித்துள்ளார். கண் விழித்துப் பார்த்த போது 5 இளைஞர்கள் முகமுடி அணிந்து, ஒருவன் கையில் அரிவாளுடனும், ஏனைய 4 பேரும் கத்தியுடனும் படுக்கை அறையில் நின்று கொண்டிருந்துள்ளார்கள். அரிவாளுடன் வந்த நபர் பழனிச்சாமியை மிரட்ட, ஏனைய நால்வரும் அவரது மனைவியை மிரட்டியுள்ளனர். நிலைமையை புரிந்து கொண்ட பழனிச்சாமி பீரோ எல்லாம் திறந்துதான் உள்ளது எல்லாவற்றையும் எடுத்துக்கொள் என்று கூறியுள்ளார்.

தனுஷ்கோடி தான் அணிந்திருந்த தாலி செயின், வளையல்கள், மூக்குத்தி, கம்மல் உள்ளிட்டவற்றை கழற்றி கொடுத்துள்ளார். மேலும் இருந்த நகைகளும் சேர்த்து சுமார் 25 பவுன் நகைகளை கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும் பழனிச்சாமியிடம் நீ போட்டிருந்த செயினை எங்கே என்று கேட்டுள்ளார்கள். அவர் நான் செயின் போடமாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பழனிச்சாமி கொள்ளையன் கையில் இருந்த அரிவாளை பறிக்க முயன்றபோது, அவரது கையில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் செல்போனில் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொள்வது போல பழனிச்சாமி பேசியுள்ளார். இதனையடுத்து வந்த கொள்ளையர்கள், தாங்கள் வந்த காரில் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: இவர்களது வீடு தனியாக உள்ளது. அருகே வாட்டர் சர்வீஸ் பண்ணும் இடம் உள்ளது. பல நாட்களாக வீட்டை கண்காணித்த கொள்ளையர்கள் காரில் வந்து வீட்டின் சுற்றுச் சுவரில் உள்ள கேட்டை ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளார்கள்.

மிகவும் பலமாக உள்ள கதவை கேஸ் வெல்டிங் மிஷின் கொண்டு உடைத்து பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். வீட்டின் பல்வேறு அறைகளுக்குச் சென்று வீடு முழுவதும் ஏதாவது பொருட்கள் உள்ளதா? என்று தேடியுள்ளார்கள். இந்த வேலை சுமார் 1 மணி நேரம் நடைபெற்றுள்ளது. பின்னர் வி.ஏ.ஓ. படுத்திருந்த அறைக்குச் சென்று அவரை கட்டிப்போட முயன்றுள்ளார்கள். அவர் முழித்துக் கொள்வே, அரிவாளால் மிரட்டி நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள் என்றனர்.

சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் பார்வையிட்டார். மேலும் மோப்ப நாய் அலெக்ஸாண்டர் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் விரல் ரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர்.
இது குறித்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.