புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆவடியில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு: பா.ஜ.க.வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு வருகிற 18-ம் தேதேி தேர்தல் நடைப்பெற உள்ளது.ஆவடி 33-வது வார்டுகான தேர்தலில் அதிமுக சார்பில் உமாமகேஸ்வரிஆனந்தும்,பாஜக

News image
Updated On :8 செப்டம்பர் 2014, 12:52 pm

முருகன்

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு வருகிற 18-ம் தேதேி தேர்தல் நடைப்பெற உள்ளது.ஆவடி 33-வது வார்டுகான தேர்தலில் அதிமுக சார்பில் உமாமகேஸ்வரிஆனந்தும்,பாஜக சார்பில் தரணி உள்பட 9 பேர் களத்தில் இருந்தனர்.பாஜக வேட்பாளருக்கு மதிமுக,பாமக,தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன. இதனிடையே பா.ஜ.க.வேட்பாளர் தரணியை போட்டியிலிருந்து விலகச்சொல்லி மர்ம ஆசாமிகள் தன்னையும்,தன்கணவரையும்  மிரட்டுவதாகவும், ஆகவே பாதுகாப்பு தரச்சொல்லி தரணி, ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான 8-ம் தேதி காலை பா.ஜ.க.வேட்பாளர் தரணி, தனது கணவருடன் ஆவடி தேர்தல் அதிகாரியும்,நகராட்சி ஆணையருமான சிவசுப்ரமணியத்தை சந்தித்து போட்டியிலிருந்து விலகுவதாக கூறி, தனது விலகல் கடிதம் கொடுத்தார்.அவரை தொடர்ந்து மற்ற 7பேரும் போட்டிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்தனர்.

இதையடுத்து களத்தில் அதிமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி மட்டுமே இருந்தார், ஆதலால் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுத்ததாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். பாஜக வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிய செய்தி காட்டுதீபோல் பரவியதும், மாலை 4 மணியளவில் ஆவடி நகராட்சி அலுவலகம் முன்பு திரண்ட பாஜக வினர் லோகநாதன் தலைமையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.தகவல் கிடைத்து போலீஸார் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுப்பட்டவர்களை கைதுசெய்தனர்.

இதனை தொடர்ந்து பாஜக வேட்பாளர் தரணி, அமைச்சர் பிவி.ரமணா முன்னிலையில் அதிமுக வில் இணைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.