தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு வருகிற 18-ம் தேதேி தேர்தல் நடைப்பெற உள்ளது.ஆவடி 33-வது வார்டுகான தேர்தலில் அதிமுக சார்பில் உமாமகேஸ்வரிஆனந்தும்,பாஜக சார்பில் தரணி உள்பட 9 பேர் களத்தில் இருந்தனர்.பாஜக வேட்பாளருக்கு மதிமுக,பாமக,தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன. இதனிடையே பா.ஜ.க.வேட்பாளர் தரணியை போட்டியிலிருந்து விலகச்சொல்லி மர்ம ஆசாமிகள் தன்னையும்,தன்கணவரையும் மிரட்டுவதாகவும், ஆகவே பாதுகாப்பு தரச்சொல்லி தரணி, ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான 8-ம் தேதி காலை பா.ஜ.க.வேட்பாளர் தரணி, தனது கணவருடன் ஆவடி தேர்தல் அதிகாரியும்,நகராட்சி ஆணையருமான சிவசுப்ரமணியத்தை சந்தித்து போட்டியிலிருந்து விலகுவதாக கூறி, தனது விலகல் கடிதம் கொடுத்தார்.அவரை தொடர்ந்து மற்ற 7பேரும் போட்டிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து களத்தில் அதிமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி மட்டுமே இருந்தார், ஆதலால் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுத்ததாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். பாஜக வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிய செய்தி காட்டுதீபோல் பரவியதும், மாலை 4 மணியளவில் ஆவடி நகராட்சி அலுவலகம் முன்பு திரண்ட பாஜக வினர் லோகநாதன் தலைமையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.தகவல் கிடைத்து போலீஸார் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுப்பட்டவர்களை கைதுசெய்தனர்.
இதனை தொடர்ந்து பாஜக வேட்பாளர் தரணி, அமைச்சர் பிவி.ரமணா முன்னிலையில் அதிமுக வில் இணைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி

கரூா் திமுக தோ்தல் பணிமனையில் தோ்தல் அலுவலா்கள் திடீா் ஆய்வு

நெமிலி பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா

மேல்மருவத்தூரில் யுகாதி கொண்டாட்டம்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

