புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வருவாய் ஆய்வாளரை தாக்கிய அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது

ஆவடி கண்ணப்பாளையம் சின்னம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (என்கிற) கண்ணப்பாளையம் ஆறுமுகம். இவர் திருவள்ளூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகி.கடந்த 2-ம் தேதி வியாநகர்

News image
Updated On :9 செப்டம்பர் 2014, 1:58 pm

முருகன்

ஆவடி கண்ணப்பாளையம் சின்னம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (என்கிற) கண்ணப்பாளையம் ஆறுமுகம். இவர் திருவள்ளூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகி.கடந்த 2-ம் தேதி வியாநகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார். இதற்கு 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்டிருந்த தேதி முடிந்துவிட்டதால் பிளக்ஸ் பேனரை அகற்ற வருவாய்த்துறையினர், ஆறுமுகத்தை கேட்டப்போது.அகற்ற மறுத்ததால், ஆவடி வருவாய்த்துறை ஆய்வாளர் செல்வம் தலைமையில் வருவாய்த்துறையினர் பிளக்ஸ் பேனரை அகற்றும்பணியில் ஈடுப்பட்டனர். சம்பவயிடத்துக்கு வந்த ஆறுமுகம், வருவாய்த்துறையினரை தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூற்ப்படுகிறது.

இது குறித்து வருவாய் ஆய்வாளர் செல்வம் ஆவடி காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார்.காவல் துறையினர், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது போன்ற பிரிவில் வழக்குபதிவு செய்து கண்ணபாளையம் ஆறுமுகம்,அவரது சகோதரர்கள் சத்தியராஜ், பாபு  ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.