நெல்லை மாவட்டத்தில் 2 ஆவது நாளாக மழை: வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது
திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணி்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.


திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணி்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்பம் கடுமையாக இருந்தது. வெப்பம் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர், சாலையோரங்களில் நடைபாதை வியாபாரிகள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். வெப்பத்தை தணிக்க குளிர்பானங்களை தேடிச் சென்றனர். பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் வழக்கத்தை விட அதிகமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.
இதனிடையே வியாழக்கிழமை இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி நான்குனேரியில் அதிகபட்சம் 80 மி.மீ மழையும், நம்பியாறு அணையில் 58 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது. களக்காட்டில் 28 மி.மீ மழையும், வடக்குபச்சையாறு அணையில் 28.2 மி.மீ மழையும், கொடுமுடியாறு அணையில் 15 மி.மீ மழையும்,
கருப்பாநதி அணையில் 9.5 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 2 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 4 மி.மீ மழையும், ராமநதி அணஐயில் 7 மி.மீ மழையும், பாபநாசம் அணையில் 5 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 4.3 மி.மீ மழையும், செங்கோட்டையில் 4.2 மி.மீ மழையும் கன்னடியன் அணைக்கட்டில் 1 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது.
2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை பிற்பகலில் திருநெல்வேலி, மேலப்பாளையம், தருவை, மேலச்செவல், கோபாலசமுத்திரம், பத்தமடை, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், முக்கூடல் உள்பட பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...