வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு: மானூர் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் கண்டனம்

ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் கல்லூர் இ. வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் எம். செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர்

News image
Updated On :29 செப்டம்பர் 2014, 9:16 am

ஷேக் அப்துல்காதர்

மானூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் கல்லூர் இ. வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் எம். செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கூட்டத்தில் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் தலைவர் வேலாயுதம், முதல்வர் ஜெயலலிதாவுக்கு  தண்டனை அளிக்கப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார். உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். கூட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவிப்பது உள்ளிட்ட கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

உறுப்பினர்கள் சு. வெள்ளத்துரை, சா. ராசையா, பொ. உருதுபாண்டி, சு. வள்ளி, வெ. ராமு, பெ. வேல்முருகன், முனியம்மாள், ஆர். அருணா, கிருஷ்ணன், உ. அய்யம்மாள், செல்வி, சு. முருகன், பா. முருகன், முத்துவேல், கலைச்செல்வி, பீர்அசன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆ. சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.