திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு 5 டன் எடையிலான மலர்களால் அலங்காரம்.  பணிகள் துவக்கம்

பழனி மலைக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஐந்து டன் எடையிலான மலர்களை கொண்டு தோரணம், மாலைகள் அமைக்கும் பணி புதன்கிழமை துவங்கியது.

News image
Updated On :1 ஏப்ரல் 2015, 2:58 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி மலைக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஐந்து டன் எடையிலான மலர்களை கொண்டு தோரணம், மாலைகள் அமைக்கும் பணி புதன்கிழமை துவங்கியது.

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.  விழாவை முன்னிட்டு அனுதினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி தீர்த்தக்காவடி எடுத்து ஆடிப்பாடி வந்தவண்ணம் உள்ளனர்.  வரும் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறவுள்ளது. விழாவை முன்னிட்டு பழனி மலைக்கோயிலை மலர்களால் அலங்கரிக்கும் பணி புதன்கிழமை துவங்கியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பருமரத்துப்பட்டி 24மனை தெலுங்கு செட்டியார் மக்கடவர் குல பங்காளிகள் சார்பில் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பார்வதி மோட்டார்ஸ் குணசேகரன் என்பவர் இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார்.  சுமார் ஐந்து டன் எடையில் மல்லிகை, கனகாம்பரம், ஜாதி மல்லி, வெள்ளை மற்றும் மஞ்சள் சாமந்தி, ஐந்து வண்ணங்களில் பெங்களூரு பட்டன் ரோஜாக்கள், கோழிக்கொண்டை, மருகு, சவுக்கு, தாமரை மலர்கள் பாதவினாயகர் கோயில் இராணி மங்கம்மாள் மண்டபத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.  இந்த மலர்களை தோரணங்களாகவும், மலர்மாலைகளாகவும் கட்டும் பணியில் சுமார் ஐம்பது பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதை பலரும் ஆச்சரியமாக பார்த்தபடி செல்கின்றனர். 

இதுகுறித்து குணசேகரன் தெரிவித்ததாவது, கடந்த ஒன்பது ஆண்டுகளாக திருப்பதி திருமலையில் மூலஸ்தான மண்டபம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மலரலங்காரம் செய்யும் பணியை செய்து வருகிறேன். இரண்டாவது முறையாக பழனி கோயிலில் அலங்காரம் செய்யவுள்ளேன். இதற்கான உதவிகளை சென்னையை சேர்ந்த சாமிநாதன் என்பவர் செய்துள்ளார். பங்குனி உத்திர தினத்தன்று அடிவாரம் பாதவினாயகர் கோயிலில் மலரலங்காரமும், ஆறுஅடி உயரத்தில் வாழைத்தண்டு, தென்னங்குருத்தால் செய்யப்பட்ட வினாயகர் சிலையும் செய்து வைக்கவுள்ளோம்.  தொடர்ந்து மலைக்கோயிலில் வெளிப்பிரகாரத்தில் உள்ள கொடிமரம், அதையடுத்த இரண்டு மண்டபங்கள் மலர்களால் அலங்கரிக்கப்படும். 

இராஜகோபுர நுழைவாயிலில் மலர்பந்தல் மற்றும் தோரணம் அமைக்கப்படும்.  தொடர்ந்து பாரவேல் மண்டபத்தில் இருந்து மூலஸ்தானம் வரையிலும் நிஜமான திராட்சைக் கொத்துக்களை கொண்டு திராட்சைத்தோட்டம் அலங்காரமும், தங்கக்கதவுக்கு தாமரை மலர்களால் நிலைத்தோரணமும் அமைக்கப்படும்.  தவிர மூலஸ்தான மண்டபம் முழுக்க மலர்களாலும், திராட்சை, மாங்கனிகளாலும் அலங்காரம் செய்யப்படும்.  இவை அனைத்தும் சுமார் ஆறடி உயரத்தில் அமைகின்றன.  இதற்கு சுமார் ஐம்பது பணியாளர்கள் மூன்று நாட்களாக இரவு, பகலென வேலை செய்கின்றனர்.  இதற்காக திருக்கோயில் நிர்வாகத்தினர் நல்லமுறையில் அனுமதி தந்துள்ளனர் என தெரிவித்தார்.   இந்த மலரலங்காரம் சுமார் மூன்று நாட்களை வரை வாடாமல் இருக்கும் என்பது சிறப்பம்சமாகும்.  இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தின் போது மலைக்கோயிலே மலர்த்தோட்டம் போல காட்சியளிக்கும் என்பது உறுதி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.