முன் கார் சாகுபடிக்கு பாபநாசம் அணையில் ஓரிரு நாள் தண்ணீர் திறப்பு?
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 8,124 ஏக்கர் நிலங்களுக்கு பாபநாசம் அணையிலிருந்து முன் கார் பருவ சாகுபடிக்கு ஓரிரு நாளில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 8,124 ஏக்கர் நிலங்களுக்கு பாபநாசம் அணையிலிருந்து முன் கார் பருவ சாகுபடிக்கு ஓரிரு நாளில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வடகிழக்கு பருவத்தில் இயல்பான மழையை விட கூடுதலாக பெய்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் 6 ஆண்டுகளுக்கு பிறகு முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து பிசான பருவத்தில் முழு அளவில் சாகுபடி செய்யப்பட்டது.
பிசான அறுவடை முடிந்து பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர் இருப்பை பொறுத்து ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முன் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 76.55 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 89.07 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.75 அடியாகவும் இருப்பதால், முன்கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையடுத்து முன் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடும் வகையில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் ஒரு சில தினங்களில் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அவ்வாறு தண்ணீர் திறப்பதன் மூலம் ஸ்ரீவைகுண்டம் தெற்கு பிரதான கால்வாய்,வடக்கு பிரதான கால்வாய் பாசனத்தில் 8,124 ஏக்கர் நிலங்களில் முன் கார் பருவம் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது.மணிமுத்தாறு அணை மூடப்பட்டுள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 85.75 அடியாக இருப்பதால் இந்த அணையில் பெருங்கால் மதகு மூலம் பாசனம் பெற்று வரும் 2856 ஏக்கர் நிலங்களுக்கும் முன் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்மட்டம் நிலவரம்: கடனாநதி அணையின் நீர்மட்டம் 26.80 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 25 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 26.99 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 13.12 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 12 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 34 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 13.09 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.50 அடியாகவும் இருந்தது.
இதனிடையே வியாழக்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையில் 2 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 4 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 8.2 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 2 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 13 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 19 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 13 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...