டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:05 am

அரவிந்தன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-  2007-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

 அரசியல், சமூகம், பண்பாடு, மொழி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசியம், பெண்ணுரிமை, கல்வி மேம்பாடு, சமூக நல்லிணக்கம், சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகள் போன்றவற்றிற்காகப் பணியாற்றுவோருக்காக இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன. ரூ.50 ஆயிரத்துடன், பாராட்டுப் பத்திரமும் கொண்டதாகும் இந்த விருது.

 2015-ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது எழுத்தாளர் அருந்ததிராய்க்கும், அயோத்திதாசர் விருது பேராசிரியர் க.நெடுஞ்செழியனுக்கும், பெரியார் விருது கோவை கு.ராமகிருஷ்ணனுக்கும், காமராஜர் விருது மறைந்த ஜி.கே.மூப்பனாருக்கும், காயிதேமில்லத் விருது ஜவாஹிருல்லாவுக்கும்,  செம்மொழிஞாயிறு விருது அவ்வை நடராசனுக்கும் வழங்கப்படும்

 விருதுகள் வழங்கும் விழா வரும் சென்னையில் மே 2-ஆம் தேதி நடைபெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.