ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு  15 நாள் நீதிமன்ற காவல்

நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் முதன்மை பொறியாளர் செந்தில் ஆகிய

News image
Updated On :5 ஏப்ரல் 2015, 10:04 am

ஷேக் அப்துல்காதர்

வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் பொறியியல்துறை தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலியில் வேளாண் பொறியியல்துறையில் உதவி செயற்பொறியாளராக பணி செய்தவர் முத்துக்குமாரசாமி (57). பொறியியல்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக முத்துக்குமாரசாமிக்கு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிப். 20 ஆம் தேதி முத்துக்குமாரசாமி, தச்சநல்லூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண்துறையில் நேர்மையாக பணி செய்து வந்த முத்துக்குமாரசாமி தற்கொலை செய்த சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அமைச்சரின் உதவியாளர், நெல்லையை சேர்ந்த ஆளும் கட்சியினர் ஆகியோர் நெருக்கடி காரணமாகவே முத்துக்குமாரசாமி தற்கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், அரசு ஊழியர்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இந்த வழக்கு தீவிரமடைந்தது.

இந்நிலையில் அக்ரிகிருஷ்ணமூர்த்தியும், வேளாண் பொறியியல்துறை தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் எஸ்.பி. அன்பு தலைமையில் சிபிசிஐடி போலீஸார் பாளையங்கோட்டை ரகுமத்நகரில் உள்ள திருநெல்வேலி குற்றவியல் 3 ஆவது நடுவர் மன்ற நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை 1.25 மணியளவில் ஆஜர் செய்தனர். இருவரையும் வரும் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.