நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழனிக்கோயில் பங்குனி உத்திரம். உண்டியல் காணிக்கை வரவு ரூ. 2  கோடியை நெருங்கியது

பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 13 நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் எண்ணப்பட்டது

News image
Updated On :9 ஏப்ரல் 2015, 1:00 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 13 நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு மொத்தம் ரூ.2 கோடியை நெருங்கியது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் பங்குனி உத்திரத்தின் போது வந்த பக்தர்கள் வரவால் உண்டியல்கள் கடந்த 13 நாட்களில் நிரம்பிது.  இதைத் தொடர்ந்து உண்டியல்கள் திறக்கப்பட்டு புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.  இரண்டு நாள் எண்ணிக்கையில் மொத்த காணிக்கை ரொக்கப்பணம் வரவு ரூபாய் ஒரு கோடியே 96 லட்சத்து 77 ஆயிரத்து 994 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான உருவம், காசு, தாலி, செயின், வேல், உருவங்களும், வெள்ளியால் ஆன வேல், உருவம், கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

தங்கம் ஆயிரத்து 545 கிராமும், வெள்ளி 5 ஆயிரத்து 575 கிராமும் கிடைத்தன. தவிர இத்தாலி, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 135 ம் வரப்பெற்றன. இவை தவிர ஏராளமான பக்தர்கள் பித்தளை பாத்திரங்கள், பட்டுப் புடவைகள்,  பரிவட்டங்கள், நவதானியங்கள், ரிஸ்ட் வாட்சுகள், முந்திரி, ஏலக்காய் மாலைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், திருக்கோயில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.