நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வைக்கோல் லாரி தீப்பற்றி வேன், வைக்கோல் நாசம்

பழனி அருகே மயிலாடும் பாறை களத்தில் வைக்கோல் போர் ஏற்றிய வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததில் வேன் மற்றும் வைக்கோல் முற்றிலும் எரிந்து நாசமானது.

News image
Updated On :11 ஏப்ரல் 2015, 1:02 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே மயிலாடும் பாறை களத்தில் வைக்கோல் போர் ஏற்றிய வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததில் வேன் மற்றும் வைக்கோல் முற்றிலும் எரிந்து நாசமானது.

பழனி அருகே கோம்மைப்பட்டியை சேர்ந்தவர் விஜயராஜ்.  இவர் தனது வீட்டு கால்நடைகளுக்காக பழனியை அடுத்த மயிலாடும்பாறை பகுதியில் நெல் அறுவடை செய்யப்பட்ட பின் இருந்த வைக்கோலை விலை பேசி முடித்துள்ளார்.  இதை எடுத்துவர சொந்த வேனை எடுத்துக் கொண்டு சனிக்கிழமை காலை மயிலாடும்பாறையில் உள்ள நெற்களத்துக்கு சென்று லோடு ஏற்றியுள்ளார்.  அப்போது எதிர்பாரா விதமாக வேன் தீப்பற்றியது.  இதில் வேன் மற்றும் வேனில் இருந்த வைக்கோல் முற்றிலும் எரிந்து நாசமானது.  இதில் வேனின் அருகே இருந்த வாத்துப்பண்ணைக்கும் தீபரவியதால் சுமார் முப்பதாயிரம் வாத்து முட்டைகள் எரிந்தன.  நல்லவேளையாக வாத்துக்கள் இல்லாதிருந்தது.  சேதத்தின் மொத்த மதிப்பு சுமார் நான்கு இலட்சமாகும். சம்பவ இடத்துக்கு வந்த பழனி தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான மீட்ப்புப்படை வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.