மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

துப்பாக்கிச் சூடு: ஆந்திர அரசு வெள்ளை அறிக்கை வெளியிட பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஆந்திர வனப்பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஆந்திர அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

News image
Updated On :11 ஏப்ரல் 2015, 6:58 am

ஆந்திர வனப்பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஆந்திர அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் இன்று காலை திருச்சி வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆந்திராவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 தமிழக தொழிலாளர்கள் பலியான சம்பவம் குறித்து உண்மை நிலையை விளக்கும் வகையில், ஆந்திர அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், காவிரி அருகே மேகேதாட்டு பகுதியில் அணை கட்டும் விவகாரத்தில் எக்காரணத்தைக் கொண்டும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது.

அதே சமயம், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்காது என்றும், திருச்சி பிஎச்இஎல் ஆலைக்கு புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் உள்ள இடர்பாடுகள் அனைத்தும்  களையப்பட்டு அதனை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான  அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.