நெல்லையில் ரயில் மறியல் முயற்சி: 117 பேர் கைது
திருநெல்வேலியில் ரயில் மறியலுக்கு முயன்ற மறுமலர்ச்சி த.மு.மு.க.வைச் சேர்ந்த 117 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.


திருநெல்வேலியில் ரயில் மறியலுக்கு முயன்ற மறுமலர்ச்சி த.மு.மு.க.வைச் சேர்ந்த 117 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஆந்திரத்தில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், தெலங்கானாவில் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் வழியில் 5 முஸ்லிம் சிறைவாசிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் திருநெல்வேலியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மறுமலர்ச்சி த.மு.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மறுமலர்ச்சி த.மு.மு.க.வின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ரசூல்மைதீன் தலைமையில் அந்த அமைப்பினர் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை திரண்டனர். மாவட்டத் தலைவர் ஏ.எம்.மைதீன்பாதுஷா, மாவட்டச்செயலர் பேட்டை மூசா, மாவட்டப் பொருளாளர் குத்புதீன், செய்யது அகமது சலபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அவர்கள் ரயில் நிலைய வளாகத்துக்குள் புகுந்து ரயில்களை மறிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணிக்காக நின்று கொண்டிருந்த திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆணையர் கந்தசாமி, உதவி ஆணையர் மாணிக்கம், திருநெல்வேலி சந்திப்பு காவல் ஆய்வாளர் ரகுபதிராஜா தலைமையிலான போலீஸார் மறியலுக்கு முயன்றவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். மொத்தம் 58 பெண்கள் உள்பட 117 பேரை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...