அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேலூரில் பேருந்து உள்ளிட்ட 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கவிழ்ந்தது: 10 பேர் காயம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே புறவழிசாலையில் சுற்றுலா பேருந்து உள்ளிட்ட 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் டிரைவர் உள்ளிட்ட 10 காயமடைந்தனர்.

News image
Updated On :16 ஏப்ரல் 2015, 6:37 am

தர்மராஜ்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே புறவழி சாலையில் சுற்றுலா பேருந்து உள்ளிட்ட 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் டிரைவர் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.

நேற்று இரவு முதல் மதுரை மாவட்டத்தில் மழை பெய்துக் கொண்டிருந்தது. புதன்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் சுற்றுலா பேருந்து தனக்கு முன்னால் சென்ற வாகனங்களை முந்தி சென்ற போது விபத்து நேரிட்டது.

சுற்றுலா புறவழி சாலையில் சுற்றுலா பேருந்து தனக்கு முன்னால் சென்றக்கொண்டிருந்த சீர்காழியில் இருந்து பிஸ்கேட் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மீது மோதியது. இதில் பிஸ்கேட் லாரி சர்விஸ் ரோடில் கவிழ்ந்தது. அந்த பிஸ்கேட் லாரிக்கு பின்னால் வந்து மினி லாரி மீது மோதி நடுரோட்டில் நின்றது. முன்னதாக சுற்றலா பேருந்து நான்குவழி சாலையில் நடுப்புற தடுப்பு மீது கடந்த திருச்சியில் இருந்து வந்துக் கொண்டிருந்து லாரி மீது மோதி கவிழ்ந்தது. இதனால் போக்குவரக்கு ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து மேலூர் போலீசார் கொட்டும் மழையில் கிரேன் உதவியுடன் பேருந்தையும், மினி லாரியையும் அப்புறப்படுத்தினர். அதன்பின்பு அப்பகுதியில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

இந்த சம்பவம் நடைபெற்ற 1 மணி நேரத்திற்கு பின்னால் மதுரையில் இருந்து சென்னை சென்றுக்கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து சம்பவ இடத்திற்கு வந்த போது அதற்கு முன்னால்  மரட்ககட்டைகளை ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த லாரி மீது மோதியதில் அரசு பேருந்து முன்புறம் முழுமையாக சேதமடைந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் லேசான காயங்களுடன் தப்பினர்.

இந்த விபத்திற்கு காரணம் முன்னதாக கவிழ்ந்த லாரியில் இருந்து சாலையில் கசிந்த ஆயில் மழைநீருடன் கலந்து வழுவழுப்பாக இருந்ததில் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.

சுற்றுலா பேருந்து டிரைவர் கலையரசன் 40, கூடுதல் டிரைவர் பாண்டியன் 40, உள்ளிட்ட 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த விபத்துக்கள் குறித்து மேலூர் போலிசார் விசாரித்து வருகின்றனர். மேலூரில் நேற்று நள்ளிரவு 11 மணி முதல் 7 மணி வரை மழை கொட்டித் தீர்த்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.