விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

மதுபானக் கடைக்கு பூட்டு: பாலபாரதி எம்எல்ஏ உள்பட 98 பேர் கைது

மதுபானக் கடைக்கு பூட்டுப்போடும் போராட்டத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி உள்பட 98 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :23 ஏப்ரல் 2015, 5:24 pm IST

மதுபானக் கடைக்கு பூட்டுப்போடும் போராட்டத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி உள்பட 98 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம்,  சித்தரேவு பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்றக்கோரி மாதர் சங்கம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக, திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். அதன் பின்னரும், அந்த மதுபானக் கடை தொடர்ந்து செயல்பட்டு வந்தது.இதனால் ஆத்திரமடைந்த மாதர் சங்கத்தினர், அந்த மதுபானக் கடைக்கு பூட்டுப்போடும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு, மாதர் சங்கத்தின் மாவட்ட செயலர் ஜி.ராணி, தலைவர் ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சம்பந்தப்பட்ட மதுபானக் கடைக்கு காலை 8 மணிக்கு பூட்டுப் போட்ட மாதர் சங்கத்தினர், தொடர்ந்து கடை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்எல்ஏ கே.பாலபாரதி தெரிவித்தது:சித்தரேவு பகுதி பொதுமக்கள், குறிப்பாக பெண்களுக்கு அதிக பாதிகப்பை ஏற்படுத்தும் மதுபானக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட மதுபானக் கடைக்கு அருகில் பள்ளிக்கூடம், கோயில், 3 அங்கன்வாடி மையங்கள் அமைந்துள்ளன. மேலும், குடிநீர் எடுக்கச் செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றார் அவர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், கலால் துறை கோட்ட உதவி ஆணையர் சேதுராமன் பேச்சு வார்த்தை நடந்தினார். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து, பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸர், எம்எல்ஏ பாலபாரதி, மாதர் சங்க நிர்வாகிகள் ராணி, சுதா, சூசை மேரி உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட 98 பேரை கைது செய்தனர்.

கைது நடவடிக்கைக்கு பின், பிற்பகல் 1 மணிக்கு சித்தரேவு மதுபானக் கடை திறக்கப்பட்டது. பூட்டுப் போடும் போராட்டம் காரணமாக, சித்தரேவு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.