டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புதுகை: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற முதுநிலை வரைவாளர் கைது

புதுக்கோட்டையில் நிலத்தின் தோராய நிலப்பதிவேடு நகலை அளிப்பதற்காக ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற  நத்தம் நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் அலுவலக முதுநிலை

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:13 am

ஆா்.மோகன்ராம்

புதுக்கோட்டையில் நிலத்தின் தோராய நிலப்பதிவேடு நகலை அளிப்பதற்காக ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற  நத்தம் நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் அலுவலக முதுநிலை பெண் வரைவாளரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

புதுக்கோடடை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நீதிமன்றம், வருவாய்த்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள பொதுவளாகத்தில் நத்தம் நிலவரி திட்ட  தனி  வட்டாட்சியர்  அலுவலகம் இயங்கி வருகிறது. புதுக்கோட்டை வட்டத்தில் அரசு நத்தம் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களை முறைப்படுத்தி அவர்களுக்கு பட்டா அளிப்பதே இந்தச் சிறப்பு அலுவலகத்தில் முக்கியமான பணியாகும்.  அரசின பலதுறை அலுவலகங்களில் பணியில் உள்ளவர்கள் கூடுதல்  பொறுப்பில்  இங்கு பணியாற்றி வருகின்றனர்.

இதில், புதுக்கோட்டை நில அளவைத்துறையைச் சார்ந்த ஜி. சரஸ்வதி(53) என்பவர் முதுநிலை வரைவாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச்சேர்ந்த புலித்தேவபாண்டின்  என்பவர் திருமயம் அருகேயுள்ள தனது நிலத்துக்கான உத்தேச நிலப்பதிவேடு(எல்டிஆர்), அ -பதிவேடு ஆகியவற்றிந் நகல்கள், வரைபடத்தையும் கேட்டு இந்த அலுவலகத்தில் அண்மையில் விண்ணப்பித்தாராம். இதையடுத்து முநிலை வரைவாளர் ஜி. சரஸ்வதி அனைத்து ஆவணங்களையும் அளிப்பதற்காக ரூ.1.20 லட்சத்தை லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதனையடுத்து  புலித்தேவபாண்டியன் புதுக்கோட்டை ஊழல் தடுப்பு, கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை  புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து  போலீஸார்  ரசாயனம் பூசிய ரூ. 5 ஆயிரத்தை கொடுத்தனுப்பினர். அதை எடுத்துக்கொண்டு  நிலவரிதிட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த சரஸ்வதியிடம் வெள்ளிக்கிழமை புலித்தேவபாண்டியன் அளித்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப்பிரிவு  துணை கண்காணிப்பாளர் தங்கவேல், ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், பூமிநாதன் ஆகியோர் சரஸ்வதியிடம் இருந்த ரசாயனம் பூசிய லஞ்சப்பணம் ரூ. 5 ஆயிரத்தை பறிமுதல் செய்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.