புதுக்கோட்டையில் நிலத்தின் தோராய நிலப்பதிவேடு நகலை அளிப்பதற்காக ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற நத்தம் நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் அலுவலக முதுநிலை பெண் வரைவாளரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
புதுக்கோடடை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நீதிமன்றம், வருவாய்த்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள பொதுவளாகத்தில் நத்தம் நிலவரி திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. புதுக்கோட்டை வட்டத்தில் அரசு நத்தம் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களை முறைப்படுத்தி அவர்களுக்கு பட்டா அளிப்பதே இந்தச் சிறப்பு அலுவலகத்தில் முக்கியமான பணியாகும். அரசின பலதுறை அலுவலகங்களில் பணியில் உள்ளவர்கள் கூடுதல் பொறுப்பில் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
இதில், புதுக்கோட்டை நில அளவைத்துறையைச் சார்ந்த ஜி. சரஸ்வதி(53) என்பவர் முதுநிலை வரைவாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச்சேர்ந்த புலித்தேவபாண்டின் என்பவர் திருமயம் அருகேயுள்ள தனது நிலத்துக்கான உத்தேச நிலப்பதிவேடு(எல்டிஆர்), அ -பதிவேடு ஆகியவற்றிந் நகல்கள், வரைபடத்தையும் கேட்டு இந்த அலுவலகத்தில் அண்மையில் விண்ணப்பித்தாராம். இதையடுத்து முநிலை வரைவாளர் ஜி. சரஸ்வதி அனைத்து ஆவணங்களையும் அளிப்பதற்காக ரூ.1.20 லட்சத்தை லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதனையடுத்து புலித்தேவபாண்டியன் புதுக்கோட்டை ஊழல் தடுப்பு, கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீஸார் ரசாயனம் பூசிய ரூ. 5 ஆயிரத்தை கொடுத்தனுப்பினர். அதை எடுத்துக்கொண்டு நிலவரிதிட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த சரஸ்வதியிடம் வெள்ளிக்கிழமை புலித்தேவபாண்டியன் அளித்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தங்கவேல், ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், பூமிநாதன் ஆகியோர் சரஸ்வதியிடம் இருந்த ரசாயனம் பூசிய லஞ்சப்பணம் ரூ. 5 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

