அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேலூர் சீர்திருத்தப் பள்ளியில் கைதிகளிடையே மோதல்: 3 பேர் படுகாயம்

மேலூர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் கைதிகளிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் சிறை வார்டன் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

News image
Updated On :25 ஏப்ரல் 2015, 7:38 am

தர்மராஜ்

மேலூர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் கைதிகளிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் சிறை வார்டன் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் 85 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் இன்று காலை சமையல் வேலைக்காக ஒதுக்கப்பட்டனர். மற்றவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். வார்டன் சந்தானம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சீர்திருத்தப்பள்ளியில் தங்கி இருந்தவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அதில் மணி என்ற மணிகண்டன் (20) பிரபு என்ற பிரபுதேவா (21) ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டனர்.

சண்டையை விலக்கச் சென்ற வார்டன் சந்தானத்திற்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.  இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் தொகுதி எம்.எல்.ஏ சாமி சம்பவ இடத்துக்கு சென்றார். மேலூர் டி.எஸ்.பி. மங்கலெஸ்வரன், இன்ஸ்பெட்கர் முத்து மற்றும் போலீஸார் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.