தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

என்.எல்.சி.யில் சுரங்க மறியல் போராட்டம்: 800க்கு மேற்பட்டோர் கைது

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம், ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி நிறுவனத்தின் நிரந்தரப் பணியாளர்கள் கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2015, 2:56 am

சீனிவாசன்

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம், ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி நிறுவனத்தின் நிரந்தரப் பணியாளர்கள் கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இன்று செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு சுரங்கம்-1, நாளை புதன்கிழமை காலை 5 மணிக்கு அனல்மின் நிலையம்-1 ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தொமுச பொதுச் செயலர் ராசவன்னியன் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை கியூபாலத்தில் இருந்து பேரணியாக 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புறப்பட்டு வந்தனர். அவர்களை கைது செய்த போலீஸார் வட்டம் 24ல் உள்ள 2 சமூதாயக் கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.