விருதுநகரில் திமுக சார்பில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் 

விருதுநகர் மாவட்ட திமுக சார்பில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி வருகிற 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் தெற்கு மாவட்ட செயலாலர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட திமுக சார்பில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி வருகிற 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் தெற்கு மாவட்ட செயலாலர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: திமுக ஆட்சிக்கு வநதால் மதுவிலக்கை அமுல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே  கலைஞர் அறிவித்திருந்தார். ஆனாலும், தமிழகம் முழுவதும் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைக்கு கொண்டு வர வலியுறுத்தி பெண்கள், மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் திரண்டு டாஸ்மாக் கடைகளுக்கு முன்பகா மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே ஒருமித்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் திமுக சார்பில் மேற்குறிப்பிட்ட நாளில் காலை 10 மணிக்கு தேசபந்து மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நான் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம்தென்னரசு உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.

அதனால், இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் ஒன்றிய, பேரூர், நகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து அணியினரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com