விருதுநகரில் தேசிய வங்கிகள் மற்றும் ஆயுள்காப்பீ்ட்டு நிறுவனம் சார்பில் பிரதமர் ஆயுள்காப்பீடு, அடல் ஓய்வூதிய திட்டம் மற்றும் தொழில் முனைவோர் கடன் திட்ட முாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் தனியார் அரங்கத்தில் நடந்த முகாமிற்கு பாண்டியன் கிராம வங்கியின் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் எல்.திருஞானசம்பந்தம், பரோடா வங்கியின் கோட்ட மேலாளர் ஜி.சனல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரோடா வங்கியின் முதுநிலை மேலாளர் ஆர்.செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார். மேலும், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் எ.சக்திவேல், நபார்டு வங்கியின் உதவி பொதுமேலாளர் சக்திவேல், ஆகியோர் வங்கி கடனுதவிகள் குறித்து விவரமாக எடுத்துரைத்தனர்.
இதில், விருதுநகர் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கிளை மேலாளர் பிரதமர் ஆயுள் காப்பீடு மற்றும் அடல் ஓய்வூதியம் ஆகியவற்றில் சேர்ந்தால் பொதுமக்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது தொடர்பாகவும், சிறுதொழில் கடன் பெற என்ன விவரங்கள் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமாக பேசினார். அதேபோல், விபத்து காப்பீடு பற்றி முதுநிலை மேலாளர் குலோத்துங்கன் விளக்கமாக பேசினார்.
இந்த முகாமில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில், நிறைவாக பரோடா வங்கியின் துணை பொதுமேலாளர் கோபால்விஜயராமன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பரோடா வங்கியின் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

