மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை:ஆர்.டி.ஓ விசாரணை

விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை இரவு இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2015, 8:34 am

சி. உதயகுமார்

விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை இரவு இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விராலிமலை அருகே உள்ள நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் பிரியா(22) இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஏற்கனவே திருமணமாண நாகமங்கலம் பகுதியை சேர்ந்த தனியார் வாகன ஓட்டுநர் கந்தசாமி(30) என்பவரை பிரியா காதலித்து  திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் யுவன்ராஜ் என்ற மகன் உள்ளார். திருமணத்திற்கு பின் விராலிமலை

அடுத்த கல்குடி பகுதியில் வசித்து வந்த பிரியாவிற்கும்-கந்தசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் மேற்கூரையில் சேலையால் தூக்கிட்டு பிரியா தற்கொலை செய்து கொண்டுள்ளார். சனிக்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கபடாதை கண்ட பக்கத்து வீட்டினர் கதவை திறந்து பார்த்த போது பிரியா துக்கிட்டு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர்

இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்து கிடந்த பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி மூன்று வருடங்களே ஆவதால் இதுகுறித்து இலுப்பூர் ஆர்டிஒ,  மு. வடிவேல்பிரபு விசாரணை செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.