திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

திருவாரூர் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்! இன்று முதல் பிரசாரம்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் திருவாரூர் பிரசாரம் பற்றி...

News image

முதல்வர் ஸ்டாலின். - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 8:57 am IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திருவாரூரில் இன்று மாலை தொடங்குகிறார்.

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின், பிரசார வாகனத்தில் ஏறி சாலைவலம் சென்று திங்கள்கிழமை மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில், திருவாரூரில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து இன்று மாலை 5 மணியளவில் தெற்குவீதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்காக வாக்கு சேகரிக்கவுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் தஞ்சாவூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து சாலை வழியாக திருவாரூக்குச் செல்லவுள்ளார்.

திருவாரூரில் திமுக சாா்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன், மன்னாா்குடியில் திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சருமான டி.ஆா்.பி. ராஜா, திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அக்கட்சியின் மாநில நிா்வாகக்குழு உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினருமான க. மாரிமுத்து, நன்னிலத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் வி.எம்.எஸ். முகமது முபாரக் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

Summary

Chief Minister Stalin Departs for Tiruvarur! Campaigning Begins Today!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.