மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

தவெகவால் பாதிப்பு திமுகவுக்குத்தான்! ஜி. செந்தமிழன் சிறப்பு நேர்காணல்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சைதாப்பேட்டை தொகுதியின் வேட்பாளரான அவர் "தினமணி" நாளிதழுக்கு அளித்த நேர்காணல்...

News image

ஜி. செந்தமிழன் சிறப்பு நேர்காணல்

Updated On :31 மார்ச் 2026, 1:11 am

வ. ஜெயபாண்டி

அதிமுகவின் முன்னாள் அமைச்சர், மாவட்டச் செயலர் எனப் பல பொறுப்புகளை வகித்தவர் சைதாப்பேட்டை ஜி. செந்தமிழன். தற்போது அமமுக துணைப் பொதுச் செயலர், தென் சென்னை மாவட்டச் செயலர், சென்னை மண்டலப் பொறுப்பாளராக உள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சைதாப்பேட்டை தொகுதியின் வேட்பாளரான அவர் "தினமணி" நாளிதழுக்கு அளித்த நேர்காணல்:

கேள்வி: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலையும், தற்போதைய தேர்தலையும் அமமுக எப்படி பார்க்கிறது?
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுகவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் துரதிருஷ்டவசமாக கூட்டணி அமைக்கப்படவில்லை. அதனால், தேர்தலில் அமமுகவின் வாக்குகள் அதிமுக வேட்பாளர்களின் தோல்விக்குக் காரணமானது. தற்போது மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தொண்டர்களின் வாக்குகள் பிரியாமல் இருக்க அதிமுகவுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடுகிறோம்.

கேள்வி: ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்க்க முயற்சிக்காதது ஏன்?
பதில்: ஓ.பன்னீர்செல்வம் அமமுகவில் இணையவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது செயல்பாடுகள் அதிமுகவில் பிரச்சினைகளை உருவாக்கின. தற்போது அவர் திமுகவுடன் இணைந்துள்ளார்.

கேள்வி: சசிகலாவையும் இணைத்திருக்க முடியாதா?
பதில்: கடந்த தேர்தலில் சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக கூறினார். உண்மையில் அந்த எண்ணம் இருந்திருந்தால், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்திருப்பார். ஆனால் அவரது செயல்பாடுகள் திமுகவுக்கு ஆதரவாக உள்ளது.

கேள்வி: அமமுகக்கு 11 தொகுதிகள் மட்டும் கிடைத்தது குறைவாக தோன்றவில்லையா?
பதில்: கூட்டணியில் சில சமரசங்கள் இயல்பானவை. முக்கிய இலக்கு திமுக ஆட்சியை வீழ்த்துவதே.

கேள்வி: வாய்ப்பு கிடைக்காத நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளார்களா?
பதில்: தேர்தல் என்பது கட்சிகளுக்கு முடிவல்ல. எதிர்காலத்தில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கேள்வி: ஆட்சியில் அமைச்சரவை இடம் கேட்பீர்களா?
பதில்: அது நிபந்தனை அல்ல. மக்கள் நலனே முக்கியம்.

கேள்வி: அதிமுக–அமமுக இணைப்பு உறுதியானதா?
பதில்: இரு கட்சியினரும் உணர்வுபூர்வமாக இணைந்து செயல்படுகின்றனர்.

கேள்வி: நடிகர் விஜயின் கட்சி வாக்குகளைப் பாதிக்குமா?
பதில்: அதனால் திமுகவின் வாக்குகள்தான் அதிகமாக பாதிக்கப்படும். சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவிலிருந்து விலகும் வாய்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.