டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பேரவைக் கூட்டத்தில் மதுவிலக்கு குறித்து அறிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மதுவிலக்கை அமல்படுத்தும் அறிவிப்பை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:28 am

அரவிந்தன்

மதுவிலக்கை அமல்படுத்தும் அறிவிப்பை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  கொளத்தூரில் பேசலாம் வாங்க நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: பேரவையில் தொகுதி பிரச்னைகள் பற்றி பேசுவீர்களா

பதில்: பேரவையில் தமிழகப் பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. அத்தி பூத்தாற்போல் சட்டப்பேரவையைக் கூட்டியுள்ளனர். இந்தக் கூட்டம் எவ்வளவு நாள்கள் நடக்கிறது என்று தெரியவில்லை. ஜனநாயக முறைப்படி பேச அனுமதித்தால், மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசுவோம்.

கே: தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் பங்கேற்க குரல் கொடுப்பீர்களா

 ப: ஏற்கெனவே குரல் கொடுத்துவிட்டோம். அது நீதிமன்றம் வரை போயிருக்கிறது. தொடர்ந்து குரல் கொடுப்போம்.

கே: மதுவிலக்கு தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்க வாய்ப்பு உண்டா

 ப: மதுவிலக்கை சுதந்திர தினத்தில் அறிவித்தால் சட்டப்பேரவை கூடும் நேரத்தில் அறிவித்துவிட்டார்களே என்று பிரச்னை எழலாம் என முதல்வர் ஜெயலலிதா நினைத்திருக்கலாம். அதன் காரணமாக அறிவிக்காமல் விட்டிருக்கலாம். சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவிக்கக் கூடும். அப்படி அறிவித்தால் வரவேற்கத் தயார் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.