அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

மின்னனு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவுகளை அழிக்கும் பணி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான விவரங்களை  அழிக்கும் பணியை அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சியினர் முனனிலையில் ஆட்சியர் வே.ராஜாராமன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

Updated On :19 ஆகஸ்ட் 2015, 2:30 pm

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான விவரங்களை  அழிக்கும் பணியை அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சியினர் முனனிலையில் ஆட்சியர் வே.ராஜாராமன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

கடந்த 2014-ல் மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குபதிவு இயத்திரங்கள் மற்றும் கட்டுப்பாடு கருவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறை பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள விவரங்களை 6 மாதத்திற்கு பின்னரே அழிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்திய 715 வாக்கு பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்கு பதிவுகளை அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் அழிக்கும் பணி தொடங்கியது.

இப்பணியின் போது அதிமுக ஒன்றியக் குழு தலைவர் கலாநிதி, திமுக சார்பில் சுப்புராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், நேர்முக உதவியாளர்(பொது) நாகஜோதி, வட்டாட்சியர்(தேர்தல்) ஸ்ரீதர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.