விருதுநகரில் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக கணவர் குடும்பத்தார் மீது மாற்றுத்திறனாளி பெண் வியாழக்கிழமை புகார் செய்தார்.
விருதுநகர் அருகே குல்லூர்சந்தையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தமிழரசி(26). இவருக்கும், திருமங்கலம் அருகே உள்ள செங்கல்படை கிராமத்தைச் சேர்ந்த தவசிராஜனின் மகன் சதிஸ்குமாருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றதாம்.
அப்போது, 6 சவரன் நகை மற்றும் சீர் வரிசை பொருள்களும் வழங்கியுள்ளனர். இந்நிலையில், திருமணம் ஆன நாளில் இருந்து எவ்வித வேலைக்கும் செல்லாமல் சதிஸ்குமார் மது குடித்துவிட்டு தமிழரசியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
மேலும், என்னுடன் சேர்ந்து வாழ 6 சவரன் நகையும், மேலும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் வாங்கி வர வேண்டும் எனக் கூறி சித்ரவதை செய்துள்ளனர். இதற்கு கணவர் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்தார்களாம். இதையடுத்து கோபித்துக் கொண்டு தந்தை வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி தமிழரசி புகார் செய்தார். அதன் அடிப்படையில் கணவர் சதிஸ்குமார், மாமனார் தவசிராஜன், மாமியார் செல்வி, கணவரின் சகோதரரி ராமூத்தாய் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

