விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சிவகாசியில் பகலில் வீடு புகுந்து பீரோவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2015, 11:43 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

சிவகாசி மேற்கு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடியிருந்து வருபவர் ரா.முத்துராஜ் (51). இவர் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி, பாறைபட்டியில் உள்ள அரசு குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் வேலை செய்து வருகிறார்.

இருவரும் வேலைக்குச் சென்று விட்டார்கள். மாலை வீட்டிற்கு விஜயலட்சுமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளேயுள்ள பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்து எட்டே கால் பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து மல்லி காவல் நிலையத்தில் முத்துராஜ் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.