அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயிலில் ரூ.10 கோடியில் வளர்ச்சி பணிகள்: அமைச்சர்கள் நேரில் ஆய்வு   

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயிலுக்கு சென்றுவரும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் ரூ.10 கோடியில் வளர்ச்சி பணிகள் நடைபெற இருக்கிறது. இதற்கான  பணியினை 3 அமைச்சர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர் ஆகியோர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On :22 ஆகஸ்ட் 2015, 11:40 am

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயிலுக்கு சென்றுவரும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் ரூ.10 கோடியில் வளர்ச்சி பணிகள் நடைபெற இருக்கிறது. இதற்கான  பணியினை 3 அமைச்சர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர் ஆகியோர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
    
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையின் மேல் உள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம்-சந்தனமகாலிங்கம் திருக்கோயில். இங்கு சுயம்பு லிங்கமாக எழுந்தருளி காட்சிதரும் இக்கோயிலுக்கு பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆடி அமாவசை திருவிழா என்பது முக்கியமானதாகும். அன்றைய நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக வந்து செல்வர்.

இந்நிலை மாறி ஒவ்வொரு மாதமும் ஆடி அமாவசை மற்றும் பௌணர்மி நாள்களில் வழிபாடு செய்வதற்காக பக்தர்கள் அதிகம் வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் திருக்கோயிலுக்கு வருகிற பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் இருந்து மலைமேல் 6.50 கி.மீ தூரம் நடந்து சென்றுதான் இக்கோயிலை அடைய வேண்டியுள்ளது.  இதுபோன்று சென்று வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரிக்கை விடுத்து வந்தனர். 
    
அதன் அடிப்படையில் பக்தர்கள் வசதிக்காக மேம்படுத்த அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல், திருக்கோயில் பகுதியில் ரூ.5 கோடியில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கும் பணியும் நடைபெற இருக்கிறது. இதற்கான முதல்கட்ட பணியை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் முன்னிலையில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.        

இது தொடர்பாக அவர் கூறுகையில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வழிபாட்டுக்காக சென்றுவரும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் இருந்து மலைமேல் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் தரம் குறையாமல் செய்து கொடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
  
அதன் அடிப்படையில் 6.50 கி.மீ தூரம் உள்ள கரடு முரடான மலைப்பாதையை சீரமைக்கவும், ஓரப்பகுதியில் கற்களால் பாதுகாப்பு சுவர் அமைத்தல், செங்குத்தான பாறையில் பாதுகாப்பு தடுப்பு கம்பிகள், பாறைகளுக்கு இடையே ஆற்றை மழைக்காலங்களிலும் எளிதாக கடக்கும் வகையில் ஓடுபாலம், சமதளமில்லாமல் காணப்படும் செங்குத்தான பாறைகளில் படிக்கட்டுக்கள், ஒவ்வொரு கி.மீட்டருக்கும் இடையே பக்தர்கள் ஓய்வு எடுக்கும் வகையில் மழை காற்றால் சேதமடையாத ஓய்வறைகள், எந்நேரமும் குடிதண்ணீர் கிடைக்கும் வகையில் விசைப்பம்புடன் கூடிய தண்ணீர் தொட்டிகள், சுகாதார வளாகமும் அமைக்கப்பட இருக்கிறது. இப்பணிகள் 9 மாதத்தில் செய்து முடிப்பதற்கு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தாார்.

அதைத் தொடர்ந்து அடிவாரப்பகுதியில் பார்வையிட்ட அமைச்சரிடம், வனத்துறையினர் இஙகு பெரிய அளவிலான தடுப்புச்சுவர் அமைக்கவும், பாதுகாப்பு தடுப்பு கம்பியும் அமைக்கப்பட இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் அவரிடம் விளக்கமாக எடுத்துரைத்தனர். அதைத் தொடர்ந்து என்னென்ன பணிகள் மேற்கொள்ளலாம் என மேல்பகுதி வரையில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது, முதன்மை செயலாளர்(வனம்) ஹன்ஸ்ராஜ்வர்மா, வனத்துறைச் செயலாளர் வி.கே.எம்.மில்கானி, விருதுநகர் மக்களவை உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், ஆட்சியர் வே.ராஜாராமன், முதன்மை தலைமை வன பாதுகாவலர் கிருஷ்ணகுமார்,  சுற்றுச்சூழல் துறை இயக்குநர் மல்லேசப்பா, மண்டல வனப்பாதுகாவலர் தெபஸ்சிஸ்தானா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.