விருதுநகர் மாவட்ட சத்துணவு ஊழியர்கள் சங்க செயற்குழு கூட்டம் புதன்கிழமை மாலையில் நடைபெற்றது.
இக்கூட்டம் அரசுஊழியர் சங்க வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். சங்கத்தின் வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் சுப்புக்காளை சமர்பித்தார். இதில், மாநில செயலாளர் அய்யம்மாள், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமசுப்புராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ராமமூர்த்தி, கருப்பையாராஜாமணி, வி.வசுமதி புஷ்பராணி, மாவட்ட இணைச்செயலாளர் முத்துராஜ் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், செப்-2ம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் உணவு வழங்காமல் அனைவரும் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. இச்செயற்குழு கூட்டத்தில் நிறைவாக மாவட்ட பொருளாளர் பாத்திமாமேரி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.