விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீஆண்டாள் கோவிலில் 7 நாள் திருபவித்திர உற்சவம்: இன்று தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருக்கோவிலில் உலக சேமத்திற்காக 7 நாள் திருபவித்திர உற்சவம் புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2015, 1:28 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருக்கோவிலில் உலக சேமத்திற்காக 7 நாள் திருபவித்திர உற்சவம் புதன்கிழமை தொடங்கியது.

உலக சேமத்திற்காக ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார், கெருடாழ்வார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, பெரியாழ்வார் மற்றும் ஆழ்வார்களுக்கு மஞ்சள் மாலைகள்  தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமான முறைப்படி, வேதபிரான்பட்டர் கோ.அனந்தராமகிருஷ்ணன் சார்பில் ஆழ்வார்களுக்கு சாற்றப்பட்டது.

பின்னர் கோவில் ஸ்தானிகம் ரெங்கராஜன் (எ) ரமேஷ், அ.சுதர்ஸன் பட்டர் உள்ளிட்டோர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின்னர் திருவாய் மொழி சேவகாலம் நடைபெற்றது.

இந்த உற்வசம் செப்டம்பர் மாதம் 3-ம் தேதி வரை 7 நாட்களுக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன் தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.