விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் தோப்பில் இருந்த 25 வாழை மரங்கள் வெட்டி சாய்த்துவிட்டு, மோட்டார் குழாய்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்திச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2015, 9:03 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் தோப்பில் இருந்த 25 வாழை மரங்கள் வெட்டி சாய்த்துவிட்டு, மோட்டார் குழாய்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்திச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம் அருகேயுள்ள ஒத்தப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் த.க.முருகன். இவருக்குச் சொந்தமான தோப்பு தெய்வேந்திரி பீட் 1-ல் உள்ளது.சனிக்கிழமை காலை தோப்பிற்கு முருகன்  சென்றபோது, அங்கிருந்த சுமார் 25 வாழை மரங்கள், 1 தென்னை மற்றும் முருங்கை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தது.

மேலும் பம்பு செட்டில் உள்ள இரு மோட்டார்கள், அதன் வயர்களை வெட்டி மர்ம நபர்கள் கிணற்றினுள் போட்டுவிட்டுச் சென்றுள்ளார்கள். சேத மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என்று முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முருகன் மம்சாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.