விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் இளம் பெண்ணிடம் செயினை பறித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக செயின் பெண்ணின் சட்டைக்குள்ளே விழுந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் மோட்டார் சைக்கிளில்  தப்பி ஓடி விட்டார்கள்.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2015, 2:39 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் இளம் பெண்ணிடம் செயினை பறித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக செயின் பெண்ணின் சட்டைக்குள்ளே விழுந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் மோட்டார் சைக்கிளில்  தப்பி ஓடி விட்டார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், கம்மாப்பட்டி-ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சௌ.முனீஸ்வரி (22). இவர் திங்கள்கிழமை மாலை திருமுக்குளம் தென்கரை வழியே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சேர்ந்து முனீஸ்வரி அணிந்திருந்த செயினை பறித்துள்ளார்கள். செயின் அறுந்து முனீஸ்வரியின் சட்டைக்குள்ளேயே விழுந்துள்ளது.

முனீஸ்வரி கூக்குரலிடவே, சம்பவத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்களும் தப்பி ஓடிவிட்டனர். பகலில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது பொதுமக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் குற்றப்பிரிவு போலீஸார் நகை பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.