ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இளம் விஞ்ஞானி மற்றும் பிரத்யேக ஆராய்சியாளர் விருதுகள்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இளம் விஞ்ஞானி மற்றும் பிரத்யேக ஆராய்சியாளர் விருது கிடைத்துள்ளது.

News image
Updated On :31 டிசம்பர் 2015, 2:57 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இளம் விஞ்ஞானி மற்றும் பிரத்யேக ஆராய்சியாளர் விருது கிடைத்துள்ளது.

கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் எம்.பள்ளிகொண்ட ராஜசேகரன் 53-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை பயோ மெடிக்கல் துறையில் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சி மலர்களில் வெளியிட்டுள்ளார். மேலும் 5-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்று ஆராய்ச்சி செய்து வருகிறார். இவரைப் பாராட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் வீனஸ் சர்வதேச நிறுவனம் இவருக்கு 2015-ம் ஆண்டிற்கான இளம் விஞ்ஞானி விருது வழங்கியுள்ளது.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளராக இருப்பவர் முனைவர் என்.செல்வபழம். இவர் புற்று நோயைத் தடுப்பதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, அதற்கான நானோ துகள்கள் அடங்கிய மருந்துகள் குறித்த 38 ஆராய்ச்சி கட்டுரைகளை சர்வதேச மலரில் வெளிட்டுள்ளார். மேலும் சர்வதேச 21 காப்புரிமைகளைப் பெற்றுள்ளார். இவரைப் பாராட்டி வீனஸ் இன்டர் நேஷனல் நிறுவனம் பிரத்யேக ஆராய்ச்சியாளர் விருது வழங்கியது.

விருது, கேடயம் மற்றும் சான்றிதழை சென்னையில் நடைபெற்ற விழாவில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டி.விஸ்வநாதன் வழங்கினார்.

விழாவில் வீனஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.சதீஸ்குமார், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன், முன்னாள் மாவட்ட நீதிபதி எம்.புகழேந்தி, கல்பாக்கம் அணு மின்நிலைய விஞ்ஞானி வைதேகி கணேசன் ஆகியோர் விருது பெற்ற பேராசிரியர்களைப் பாராட்டினர்.

விருது பெற்றுத் திரும்பிய பேராசிரியர்களை புதன்கிழமை பல்கலைக்கழகத்தின் வேந்தர் க.ஸ்ரீதரன், இயக்குநர்கள் டாக்டர் சசி ஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.