டியூப் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 154 கோடி
முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா (டி.ஐ.ஐ.) நிறுவனத்தின்


முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா (டி.ஐ.ஐ.) நிறுவனத்தின் மொத்த லாபம், முந்தைய நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிலையைவிட 21 சதவீதம் அதிகரித்து ரூ. 154 கோடியாக உள்ளதென அந்நிறுவனம் அறிவித்தது.
காலாண்டு செயல்பாடு குறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: டி.ஐ.ஐ.யின் மொத்த வருவாய் 8 சதவீதம் அதிகரித்து ரூ. 942 கோடியாக உள்ளது. வரி, வட்டி உள்ளிட்டவற்றுக்கான ஒதுக்கீட்டுக்கு முந்தைய லாபமாக ரூ. 47 கோடியை நிறுவனம் ஈட்டியது. சைக்கிள், உலோக வார்புப் பொருள் பிரிவுகளில் விருப்ப ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த ஒதுக்கிய தொகை ரூ. 11.73 கோடியாகும். இதையடுத்து, மூன்றாம் காலாண்டில் நிகர அளவில் நிறுவனத்துக்கு ரூ. 40 லட்சம் இழப்பு ஏற்பட்டது.
நிதிச் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள துணை நிறுவனமான சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ், அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ. 3082 கோடி மதிப்பிலான கடனளிப்பைச் செய்துள்ளது. வட்டிக்குப் பிந்தைய நிகர லாபமாக ரூ. 113 கோடியை அந் நிதி நிறுவனம் ஈட்டியுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இதே கால அளவுடன் ஒப்பிடுகையில், நிகர லாபம் 21 சதவீதம் வளர்ச்சி பெற்றிருக்கிறது.
பொதுக் காப்பீட்டில் ஈடுபட்டுள்ள துணை நிறுவனமான சோழமண்டலம் எம்.எஸ். ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், மூன்றாம் காலாண்டில் ரூ. 405 கோடியை பிரீமியம் வருவாயாகப் பெற்றது. இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 39 கோடியாகும். சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் பெற்ற நிகர லாபமான ரூ. 13 கோடியுடன் ஒப்பிடுகையில், இப்போது 205 சதவீத வளர்ச்சி உள்ளது.
மற்றொரு துணை நிறுவனமான சாந்தி கியர்ஸின் வருவாய் ரூ. 42 கோடியாகும். துறை ரீதியாக, சைக்கிள் துறை வருவாய் 14 சதவீதம் அதிகரித்து, ரூ. 318 கோடியாக உள்ளது. பொறியியல் துறை 3 சதவீதம் உயர்ந்து, ரூ. 419 கோடியாக உள்ளது. உலோக வார்ப்புத் தொழிலில் வருவாய் 8 சதவீதம் அதிகரித்து, ரூ. 238 கோடியாக உள்ளது என டி.ஐ.ஐ. தெரிவித்தது.
டி.ஐ.ஐ. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எல்.ராம்குமார் கூறுகையில், இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவற்றையொட்டிய தயாரிப்பில் தொய்வு ஏற்பட்டது. இரண்டாம் காலாண்டைவிட அந்தப் பொருள்களுக்குத் தேவை குறைவாக இருந்தது.
புதிய ஆலையில் பெரிய அளவு விட்டம் கொண்ட குழாய்களின் மாதிரி வடிவங்கள், உள்நாட்டில் பெரிய வாடிக்கையாளர்கள், வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பரிசீலனைக்காகத் தயாரிóக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆலையின் முழுச் செயல்பாடுகள் வரும் காலாண்டுகளில் வருவாய் ஈட்டித் தரும் என்று கூறினார்.
ஆண்டு வருவாயாக ரூ. 24,300 கோடியுள்ள சென்னையின் முருகப்பா குழுமம், 28 பிரிவுகளுடன் இயங்கி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...