தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி(2015) யில் வென்றவர்களுக்கு இன்று பரிசளிக்கப்படுகிறது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டச் செயலர் ரமா.ராமநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நிகழாண்டுக்கான கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டிக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்து 316 சிறுகதைகள் வரப்பெற்றன. கவிஞர் ராசி.பன்னீர்செல்வன் தலைமையிலான நடுவர் குழு பின்வரும் கதைகளைத் தேர்வு செய்துள்ளனர்.
புதுகை முத்துமாரி மகன் எழுதிய இருளில் மறையும் நிழல் என்ற சிறுகதை முதல் பரிசையும், திருவாரூர் சிவக்குமார் முத்தையா எழுதிய வள்ளம் போகும் இரவுகள் என்ற சிறுகதை இரண்டாம் பரிசையும், ஈரோடு அன்புக்கரசி ராஜ்குமார் எழுதிய தனிமை சிறுகதை மூன்றாம் பரிசையும் பெற்றுள்ளன. செய்யாறு தீ.தா.நாராயணன் எழுதிய தேனாம்பேட்டை சிக்னல், தூத்துக்குடி அபிவிக்னேஷ் எழுதிய என் முதல் காதலும் கடைசிக் காதலும், அண்டனூர் சுரா எழுதிய மட்டுக்குழி ஆகிய கதைகள் ஆறுதல் பரிசுகளையும் பெற்றுள்ளன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சனிக்கிழமை புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெறும் கலை இலக்கிய இரவில் பரிசு,சான்றிதழ் வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

