திண்டுக்கல் மாநகராட்சியை முற்றுகையிட முயன்ற ஆதி தமிழர் பேரவையைச் சேர்ந்த 67 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும், 12 ஆண்டுகள் தாற்காலிகப் பணியாளர்களாக உள்ளவர்களை நிரந்தரப் பணியாளர்களாக ஆக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆதி தமிழர் பேரவை சார்பில் திண்டுக்கல் மாநகராட்சியை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடத்தப்படுவதாக இருந்தது.
பெரியார் சிலை அருகில் இருந்து போராட்டக் குழுவினர் புறப்படத் தயாரான நிலையில், இந்தப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்ததை அடுத்து, அந்த அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆனந்தன், திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் விடுதலை, திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் காளிராஜ் உள்பட 67 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, பேரவை சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனு, மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.