கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

 தர்ப்பூசணிகளை பழக்க வைக்கும் நச்சுத்தன்மை ஊசி: கடலூரில் அதிகாரி ஆய்வு

தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க இளநீர், தர்ப்பூசணி பழம் உள்ளிட்டவைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், தர்ப்பூசணி பழங்களை

News image
Updated On :21 பிப்ரவரி 2015, 10:27 am

முத்துகுமார்

கடலூரில் தர்ப்பூசணிகளை பழக்க வைக்க நச்சுத்தன்மை ஊசி பயன்படுத்தப்படுகிறதா என்று உணவு பாதுகாப்பு அதிகாரி சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க இளநீர், தர்ப்பூசணி பழம் உள்ளிட்டவைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், தர்ப்பூசணி பழங்களை பழுக்க வைக்க நச்சுத்தன்மை கொண்ட ஊசி பயன்படுத்தப்படுவதாகவும், அதனால், புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக வாட்ஸ்அப்பில் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில், கடலூரில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.பி.ராஜா மற்றும் சுப்பிரமணியன், நந்தகுமார் ஆகியோர் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சில கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தர்ப்பூசணி பழங்களை கைப்பற்றினார்.இதுகுறித்து ராஜா கூறுகையில், தர்ப்பூசணிகளை பழக்க வைக்கவும், பழத்தின் நிறம் சிகப்பாக மாற்றவும் எரித்ரோசின்-பி என்ற மருந்து ஊசி மூலமாக தர்ப்பூசணிகளில் செலுத்தப்படுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. நச்சுத்தன்மை கொண்ட இந்த மருந்து பயன்படுத்திய பழங்களை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, பறிமுதல்செய்யப்பட்ட பழங்களின் மாதிரி சென்னை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கிடைக்கும் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், வியாபாரிகள் பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.