வனத்துறையில் பணி வழங்க வலியுறுத்தி,மயிலாடுதுறை முதுகலை வனவாழ்  உயிரியல் துறை மாணவர்கள் உண்ணாவிரதம்

வனவாழ் உயிரியல் படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வனத்துறையில் வனச்சரகர்,வனவர் பணிகளை வழங்கவேண்டும் என வலியுறுத்தி,  முதுகலை வனவாழ் உயிரியல் துறை மாணவர்கள் சனிக்கிழமை

வனவாழ் உயிரியல் படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வனத்துறையில் வனச்சரகர்,வனவர் பணிகளை வழங்கவேண்டும் என வலியுறுத்தி,  முதுகலை வனவாழ் உயிரியல் துறை மாணவர்கள் சனிக்கிழமை மயிலாடுதுறை வட்டாட்சியர்அலுவலகம் முன்பு  கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

முதுகலை வனவாழ் உயிரியல்(m.sc wild life biology)படிப்பு திருச்சி பாரதிதாசன்  பல்கலைக்கழகத்தின் கீழ் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியிலும்,கோவை பாரிதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உதகை அரசு கலைக்கல்லூரியிலும் இயங்கி வருகின்றது.30 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்தப் படிப்பைத் தொடர்ந்த சுமார் 500-க்கு மேற்பட்டோர் வனத்துறையில் தற்காலிக தினக் கூலிகளாக வேலைப்பார்த்து வருகின்றனர்.

இவ்வாறுள்ள மாணவர்களுக்கு வனப்பணியில் முன்னுரிமை வழங்க அரசு ஆணை பிறப்பித்தும்,பணி வழங்குவதில் வனவாழ் உயிரியல் மாணவர்கள் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில்,சனிக்கிழமை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிணைந்த  முதுகலை வனவாழ் உயிரியல் துறை மாணவர்கள்,வனத்துறையின் வனச்சரகர்,வனவர் பணிகளில் இடஒதுக்கீடு செய்யவேண்டும்.வனவாழ் உயரியல் பாடத்தை தமிழ்நாட்டில் ரத்து செய்யவேண்டும் என்றக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.இந்திய மாணவர் சங்கம் ஆதரவு:மாணவர்களின் இந்தப் போராட்டத்திற்கு  இந்திய மாணவர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

சனிக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கிய உண்ணாவிரதம் பிற்பகல் 2-மணிக்கு நிறைவு பெற்றது.உண்ணாவிரதத்தில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி வனவாழ் உயிரியல் துறை மாணவர்கள்,முன்னாள் மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர்கள்  தங்கத்தினர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com