அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 67-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர அதிமுக சார்பில் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மற்றும் தில்லைக்காளியம்மன் கோயில் ஆகியவற்றில் சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது.
சிதம்பரம் நகர அதிமுக சார்பில் நடராஜர் கோயிலில் ஜெயலலிதா நீண்ட ஆயுள் பெற்று பல்லாண்டு வாழ்ந்திட வேண்டி அவரது பெயரில் சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. பிரசாதத்தை கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.அருண்மொழிதேவனிடம், சிவராமதீட்சிதர் வழங்கினார்.
முன்னதாக கீழவீதி அதிமுக அலுவலகத்தில் நகர மாணவரணி செயலாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டின் பேரில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் கேக் வெட்டி அனைவருக்கு வழங்கினார்.
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில், கீழத்தெரு மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன.
மாரியம்மன் கோயிலில் 50 பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது. அனந்தீஸ்வரன் கோயிலில் நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் வில்வமரக்கன்றுகளை நட்டார். கமலீஸ்வரன் கோயில் தெருவில் நகரமன்ற துணைத் தலைவரும், நகரச் செயலாளருமான ரா.செந்தில்குமார் வில்வ மரக்கன்றுகளை நட்டார்.
மாரியப்பாநகரில் உள்ள முதியோர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது. மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவர்களுக்கு காலை, மதியம் உணவு வழங்கப்பட்டது. 33 வார்டுகளிலும் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்
அரசு விநியோக மருந்துகள் சட்டவிரோத விற்பனை: 5 போ் கைது

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்! - உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


