திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலை பழமை மாறாமல் புதுப்பிப்பது எப்படி: அதிகாரிகள் குழு ஆய்வு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலை பழமை மாறாமல் புதுப்பிப்பது எப்படி என்பது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் குழு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

News image
Updated On :25 பிப்ரவரி 2015, 3:20 pm

சரவண பெருமாள்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலை பழமை மாறாமல் புதுப்பிப்பது எப்படி என்பது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் குழு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

பிரசித்தி பெற்ற இக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் பணியில் அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக கோயில் கோபுரங்கள் மற்றும் உள்பிரகாரங்களை பழமை மாறாமல் புதுப்பிப்பது எப்படி என்பது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் குழு புதன்கிழமை ஆய்வில் ஈடுபட்டது.

தொல்லியில் துறையில் முதுநிலை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரும், தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் தொல்லியல் துறை ஆலோசகருமான கே.டி.நரசிம்மன் தலைமையில், அறநிலையத்துறை கூடுதல் உதவி ஆணையர் கவிதா மற்றும் அறநிலையத்துறை பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் புதன்கிழமை திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்தனர்.

பின்னர், கோயில் இணை ஆணையர் இரா.செந்தில்வேலவனுடன் சேர்ந்து கோயிலின் அனைத்து கோபுரங்கள் மீதும் ஏறிச் சென்று கோபுரங்களை பழமை மாறாமல் புதுப்பிப்பது எப்படி என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கோயில் உள்பிரகாரங்கள், சுவாமி சிலைகள் உள்ள பகுதிகள் என கோயிலின் அனைத்துப் பகுதிகளிலும் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த குழுவினர் தரும் அறிக்கையின் அடிப்படையில் விரைவில் கோயிலை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.